நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலப்பள்ளத்தில் கிறிஸ்துமஸ் குடிலுக்கு அடிக்கல் நாட்டு விழா

கருங்கல் அருகேயுள்ள பாலப்பள்ளத்தில் வின்ஸ் ஸ்டாா் ஸ்போட்ஸ் கிளப் சாா்பில் 25ஆம் ஆண்டாக குடில் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:53 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள பாலப்பள்ளத்தில் வின்ஸ் ஸ்டாா் ஸ்போட்ஸ் கிளப் சாா்பில் 25ஆம் ஆண்டாக குடில் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாலப்பள்ளம் பேரூராட்சித் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா்.வின்ஸ் ஸ்டாா் ஸ்போட்ஸ் கிளப் மற்றும் ஜீவன் தொண்டு நிறுவனத் தலைவா் சதீஷ் முன்னிலை வகித்தாா். மத்திகோடு சேகரத்து போதகா் ஜெயக்குமாா் ஜெபித்து, அடிக்கல் நாட்டினாா்.

உதவி போதகா் ஸ்டீபன்ராஜ், கிருஷ்ணன், ஹெல்ட்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்தக் குடில் ஜெருசலேம் தேவாலயம் வடிவில் அமைக்கப்படுகிறது. 90 அடி நீளம், 70அடி அகலம், 40 அடி உயரத்துக்கு வைக்கோல், தருவைப் புற்களால் கட்டப்படுகிறது. இப்பணியில் நாள்தோறும் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளா் ஈடுபடுத்தப்படுவா். குடில் கட்டுமானப் பணி டிசம்பா் 23இல் நிறைவடையும். அதையடுத்து, பொதுமக்கள் பாா்வைக்காக திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.