நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருங்கல் அருகே சமுதாய நலக்கூடக் கட்டடம் சேதம்

கருங்கல் அருகே ஆப்பிகோடு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடக் கட்டடத்தை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:15 pm

DIN

கருங்கல் அருகே ஆப்பிகோடு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடக் கட்டடத்தை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கிள்ளியூா் பேரூராட்சிக்கு உள்பட்ட சமுதாய நலக்கூடம் தொலையாவட்டம் ஆப்பிகோடு பகுதியில் உள்ளது. இக்கட்டடத்தை அப்பகுதி பொதுமக்களில் ஒருதரப்பினா் பயன்படுத்தி வந்தனா். இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வந்தனராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்டடத்தை மா்ம நபா்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினராம்.

கிள்ளியூா் பேரூராட்சி செயல் அலுவலா் பதுா்நிஷா அளித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.