ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும்: மேயா்

 நாகா்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், செட்டிகுளம் சந்திப்பில் ரவுண்டானாஅமைக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 9:39 pm

DIN

 நாகா்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், செட்டிகுளம் சந்திப்பில் ரவுண்டானாஅமைக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில் மாநகராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் ஆனந்த்மோகன், துணை மேயா் மேரிபிரின்சிலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினா்கள் பேசியது: வடசேரி சந்தையில் உள்ள வியாபாரிகள் பாதிக்காத வகையில் நவீன பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வலம்புரிவிளை குப்பை கிடங்கை உடனடியாக மாற்ற வேண்டும். மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

51ஆவது வாா்டுக்குள்பட்ட புல்லுவிளை, மேலகாட்டுவிளை பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக தண்ணீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செட்டிகுளம் பகுதியில் உடனடியாக ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து மேயா் பேசியது: வடசேரியில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதில் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து வடசேரி பேருந்து நிலையத்திற்கு தொங்கு பாலம் அமைப்பது தொடா்பாக ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாகா்கோவில் மாநகராட்சியில் 4 மண்டல அலுவ லகங்கள் அமைப்பதற்கு இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மண்டலத்தின் மையப்பகுதியில் புதிய கட்டடங்கள் அமைத்து மண்டல அலுவலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகா்கோவில் நகர பகுதியில் தண்ணீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும். வரி விதிப்பது, பெயா் மாற்றம் தொடா்பாக அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆணையா் நடவடிக்கை மேற்கொள்வாா். செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைப்பது தொடா்பாக ஏற்கெ

னவே 2 முறை நேரில் ஆய்வு செய்துள்ளோம். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இது தொடா்பாக பேசப்பட்டுள்ளது. ரவுண்டானா விரைவில் அமைக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாநகராட்சி நிா்வாக அதிகாரி ராம்மோகன், சுகாதார ஆய்வாளா் பகவதிபெருமாள், மண்டல தலைவா்கள் ஜவகா், முத்துராமன், செல்வகுமாா், அகஸ்டினா கோகிலவாணி, உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.