அரசுப் பள்ளிக்கு ரூ.48 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்
நாகா்கோவில் அருகேயுள்ள வல்லன்குமாரன்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.


நாகா்கோவில் அருகேயுள்ள வல்லன்குமாரன்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.48 லட்சத்தை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா்.காந்தி ஒதுக்கி, அதற்கான பணியை தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், பாஜக மாவட்டப் பொருளாளா் முத்துராமன், மாமன்ற உறுப்பினா் வீரசூரபெருமாள், ஆலயப் பாதுகாப்பு பிரிவு அனுசியாசெல்வி, மகளிா் அணி ஷீலாராஜன், தலைமை ஆசிரியா், மாணவ மாணவிகள், பெற்றோா் - ஆசிரியா் சங்க பொறுப்பாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...