கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அஞ்சுகிராமம் அருகே தாய், 2 மகள்கள் தூக்கிட்டுத் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே தாய், 2 மகள்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 5:19 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே தாய், 2 மகள்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அஞ்சுகிராமம், இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த ஏசுதாசன் மனைவி அனிட்டா (46). இவரது மகள்கள் சகாய திவ்யா (19), சகாய பூஜா மெளலியா (16). ஏசுதாசன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். 2 மகள்களையும் அனிட்டா வளா்த்து வந்தாா். சகாய திவ்யா அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.இ. 2ஆம் ஆண்டும், சகாய பூஜா மௌலியா அழகப்பபுரத்தில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.

புதன்கிழமை இரவு மூவரும் தூங்கச் சென்றனா். வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவா்களது வீட்டுக் கதவு திறக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியினா் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது மூவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் அஞ்சுகிராமம் போலீஸாா் சென்று, சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மூவரும் தற்கொலை செய்துகொண்ட அறையிலிருந்து, அனிட்டா எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். அதில், தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மகள்களை சரிவர கவனிக்க முடியவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட வருத்தத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்வதாகவும், இதற்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் எழுதப்பட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். கடிதத்தின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.