நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து குமரி மாவட்ட திமுக இளைஞர் அணியின் சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் தலைமை வகித்தார்.
பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். அவர் பேசும் போது, நீட் தேர்வால் ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவிகளின் மருத்துவர் கனவு கானல் நீராகி விட்டது.
சட்டப் போராட்டம் நடத்தி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரை முதல்வர் ஓய மாட்டார்.
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் இந்தியா கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும். அப்போது நீட் மட்டுமல்ல
தமிழகத்துக்கு எதிரான அனைத்து பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும் என்றார் அவர். இதில் திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


