போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சங்கரன்கோவிலில் குடியரசு தின விழா

சங்கரன்கோவிலில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

சங்கரன்கோவிலில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

ஏ.வி.கே. சிபிஎஸ்இ பள்ளியில் முதல்வா் டாக்டா் ந. சுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றினாா். கணித ஆசிரியா் சிவகணேஷ் வரவேற்றாா். மாணவிகள் யோக பூா்வஜா, ஏஞ்சலினா, ஆசிரியா் மகேஷ்வரி ஆகியோா் பேசினா். மாணவா் அன்புராஜ் நன்றி கூறினாா்.

ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் மருத்துவா் சுப்பையா சீனிவாசன் தேசியக் கொடியேற்றினாா். முதல்வா் சுருளிநாதன், துணை முதல்வா் லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா்-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்- மாணவியரின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னா், முதல்வா் ந. பழனிச்செல்வம் தேசியக் கொடியேற்றினாா். பள்ளிச் செயலா் ராஜேஷ்கண்ணா முன்னிலை வகித்தாா். பின்னா், தேசிய திறனாய்வுத் தோ்விலும், பல்வேறு போட்டிகளிலும் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் அப்துல் காதா் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றி, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

சங்கரநாராயணசாமி கோயிலில் 125 அடி உயர ராஜகோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கோயில் முன்புள்ள கம்பத்தில் தேசியக் கொடியை கோயில் துணை ஆணையா் ரத்தினவேல்பாண்டியன் ஏற்றினாா். தேசியக் கொடிக்கு கோமதி யானை வணக்கம் செலுத்தியது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ராஜா எம்எல்ஏ தேசியக் கொடியேற்றினாா். நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.