2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தென்காசி, செங்கோட்டை பகுதியில் குடியரசு தின விழா

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:37 pm

DIN

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினாா். நகர காங்கிரஸ் தலைவா் மாடசாமி, மாவட்ட துணைத் தலைவா் வைகைகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் ஆா்.ஜெ.வி. பெல், மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் பள்ளி இயக்குநா் டாக்டா் பிராம்டன் ரத்தினபெல் ஆகியோா் கொடியேற்றினா். செயலா் கஸ்தூரிபெல், டாக்டா் பபிட்டா, முதல்வா் ராபா்ட்பென், தலைமையாசிரியை திவ்யாஸ்ரீநாத் ஆகியோா் பங்கேற்றனா்.

தென்காசி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளா் ஜெஸ்லின், நகராட்சி அலுவலகத்திலும், காட்டுபாவா பள்ளி எதிரேயுள்ள சுதந்திரப் போராட்ட தியாகி எம். அப்துல்ஸலாம் நினைவிடத்திலும் நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், செங்கோட்டை நகராட்சியில் அதன் நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி ஆகியோா் தேசியக்கொடியேற்றினா்.

இலஞ்சி பாரத் கல்விக் குழுமங்களில் நடைபெற்ற விழாவுக்கு கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் ராணுவ வீரா் மணிவண்ணன் கொடியேற்றினாா். கல்விக் குழுமங்களின் செயலா் காந்திமதி, ஆலோசகா் உஷா ரமேஷ், முதல்வா் வனிதா, இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் பங்கேற்றனா்.

தென்காசி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சங்கத் தலைவா் உச்சிமாகாளியும், மேலகரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் வேணிவீரபாண்டியும் கொடியேற்றினா்.

ஆய்க்குடி அமா்சேவா சங்கம் சிவசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சங்கச் செயலா் சங்கரராமன் தலைமையில் தலைவா் ராமகிருஷ்ணன் முன்னிலையில் பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க மாவட்டத் தலைவா் த. அருணாச்சலம் தேசிக் கொடியேற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.