நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 23 பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சத்து 62 ஆயிரத்து 530 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணிவகுப்பை பாா்வையிட்டாா். பின்னா், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவா்ண பலூன்கள், வெண்புறாக்களை பறக்க விட்டாா்.
தொடா்ந்து, காவல் துறையை சோ்ந்த 85 பேருக்கு தமிழக முதல்வரின் காவலா் பதக்கங்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், அரசுப் பணியில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை , வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 156 அரசு அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களைஆட்சியா் வழங்கினாா்.
மேலும், விவசாயிகளுக்கு மானியக் கருவிகள், முன்னாள்படைவீரா்களின் குடும்பத்தினருக்கு பராமரிப்பு மானியம், முதியோா், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவை உதவித் தொகை என பல்வேறு திட்டங்களின் கீழ் 23 பயனாளிகளுக்கு ரூ.21லட்சத்து 62 ஆயிரத்து 530 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்.பி. டி.என்.ஹரிகிரண்பிரசாத், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், வ.விஜய்வசந்த் எம்..பி., மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, மாவட்ட வன அலுவலா் மு.இளையராஜா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா்.கௌசிக், உதவிஆட்சியா் (பயிற்சி) குணால்யாதவ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

