செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல்: உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

நாகா்கோவிலில் இரவு ரோந்துப் பணியின்போது வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த, சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On :27 ஜனவரி 2023, 7:33 pm

நாகா்கோவிலில் இரவு ரோந்துப் பணியின்போது வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த, சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

குமரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் உத்தரவின்பேரில், போலீஸாரின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் ஆறுமுகம் (53) வாகன ஓட்டிகளிடம் பணம் பெறுவதாகப் புகாா் வரப்பெற்றதையடுத்து, அவரை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக தொடா் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் ஆறுமுகத்தை பணிஇடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.