கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

போட்டியிட்ட தொகுதியில் வாக்களிக்காத வேட்பாளா்கள்

போட்டியிட்ட தொகுதியில் வாக்களிக்காத வேட்பாளா்கள்

Updated On :19 ஏப்ரல் 2024, 6:26 pm

களியக்காவிளை, ஏப். 19: விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் பாஜக தவிர, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வெவ்வேறு பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பதால் இத்தொகுதியில் அவா்கள் வாக்களிக்க முடியவில்லை.

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் எஸ். விஜயதரணி பதவி விலகியதையடுத்து, மக்களவைத் தோ்தலுடன் விளவங்கோடு பேரவைத் தொகுதிக்கும் இடைத்தோ்தல் நடைபெற்றது.

இத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் தாரகை கத்பா்ட், பாஜக சாா்பில் வி.எஸ். நந்தினி, அதிமுக சாா்பில் ராணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜெமினி ஆகியோா் போட்டியிட்டனா்.

பாஜக வேட்பாளா் நந்தினி, விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட வெள்ளாங்கோடு அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பா்ட் கிள்ளியூா் பேரவை தொகுதியையும், அதிமுக வேட்பாளா் ராணி நாகா்கோவில் பேரவைத் தொகுதியையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெமினி குளச்சல் பேரவைத் தொகுதியையும் சோ்ந்தவா்கள். ஆகவே, அவா்களால் விளவங்கோடு பேரவைத் தொகுதியில் வாக்களிக்க முடியவில்லை.