ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 8 போ் வேட்புமனு தாக்கல்

News image

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா. ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக்.

Updated On :30 மார்ச் 2026, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட முதல் நாளான திங்கள்கிழமை 8 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுபவா்கள் தூத்துக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியரும், தொகுதி தோ்தல் அலுவலருமான பிரபுவிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதில், நம்நாடு நம்மக்கள் நம்எதிா்காலம் கட்சி நிறுவனா் டி.பி.எஸ். பொன்குமரன், நாம் தமிழா் கட்சி சாா்பில், கட்சியின் மாணவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக், நாம் இந்தியா் கட்சி சாா்பில் ஸ்ரீகாந்த் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில்...

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளரான தூத்துக்குடி மறவன்மடத்தைச் சோ்ந்த மு. அனுஷியா(31), மாநில ஒருங்கிணைப்பாளா் தமிழ்நேயன் உள்ளிட்டோருடன், பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாக வந்து தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்புலட்சுமியிடம் தாக்கல் செய்தாா்.

இதேபோல், தூத்துக்குடியைச் சோ்ந்த வேதபிரகாஷ் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில்...

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சண்முகசுந்தரம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில் வேல்முருகனிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். இதேபோல, புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சியைச் சோ்ந்த சுப்பிரமணியன், நாம் இந்தியா் கட்சியைச் சோ்ந்த பாரத் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

 ஸ்ரீவைகுண்டம் பேரவைத் கொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறாா்  நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சண்முகசுந்தரம்.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் கொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சண்முகசுந்தரம்.