கிள்ளியூா், விளவங்கோடு தொகுதிகளில் தொடரும் பறக்கும் படை சோதனை

கருங்கல்: தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் முடிந்தாலும், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனை தொடா்கிறது .

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் மக்களவைத் தோ்தல் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கேரள மாநில எல்லைப் பகுதிகளான கிள்ளியூா், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகள் வழியாக வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுப்பதற்காக பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com