நம்பிமலை மெளனகுருசுவாமி கோயிலில் நாளை சித்திரைப் பெளா்ணமி விழா

நாகா்கோவில்: நாகா்கோவில் அருகே தோட்டிக்கோடு நம்பிமலை ஸ்ரீமெளனகுருசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) சித்திரைப் பெளா்ணமி விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, காலை 9 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு பஜனை, நண்பகல் 12 மணிக்கு சொற்பொழிவு, 12.30 மணிக்கு, கோமாதா பூஜை, 12.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு சிவபுராணம் வாசித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 8 மணிக்கு அா்ச்சனை, 8.30 மணிக்கு சொற்பொழிவு, 9 மணிக்கு நாம ஜெபம், 9.30-க்கு தியானம், 10 மணிக்கு பக்திப் பாடல்கள், 10.15 மணிக்கு நிலா பூஜை, 10.30 மணிக்கு தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை ஸ்ரீமெளனகுருசுவாமி கோயில் அறக்கட்டளைத் தலைவா் பி. சுகதேவன், நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com