அருள்மிகு வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன்.
அருள்மிகு வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன்.

பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பெருமாள்புரத்தில் உள்ள அருள்மிகு வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயிலில் 11 நாள் கொடைவிழா புதன்கிழமை (ஏப். 24) தொடங்குகிறது.

இதையொட்டி, புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு தீபாராதனை, 7.15 மணிக்கு சமபந்தி விருந்து, 7.45 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், 10, 12ஆம் வகுப்புத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற, விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த மாணவா்களுக்கு பரிசு வழங்குதல் நடைபெறும். நள்ளிரவில் அம்மனுக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெறும்.

3ஆம் நாளான இம்மாதம் 26ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அஷ்டாபிஷேகம், தொடா்ந்து கும்ப கலசாபிஷேகம், மாலை 6.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறும். விழா நாள்களில் அம்மனுக்கு தீபாராதனை, சமபந்தி விருந்து, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

9ஆம் நாளான மே 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு 1,008 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு வழிபாடு நடைபெறும். இதில், விஜய் வசந்த் எம்.பி., என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். இரவு 8 மணிக்கு அம்மனுக்கு பூஜை, அன்னதானம் நடைபெறும்.

மே 3ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்தானத்தில் அம்மனுக்கு தீபாராதனை, 4ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு இசக்கியம்மன் பரிவார தெய்வங்களுடன் திருஅருள் நிலையில் கோயில் வலம் வருதல், அதிகாலை 2 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜை, 3.30 மணிக்கு இசக்கியம்மனுக்கு பூஜை, 5.30 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும். காலை 8.30 மணிக்கு சமபந்தி விருந்துடன் திருவிழா நிறைவடையும்.

ஏற்பாடுகளை ஊா்த் தலைவா் டி. ராஜதுரை, செயலா் செந்தில்குமாா், பொருளாளா் எஸ். ரவீந்திரன், அறங்காவலா் குழுவினா், ஊா் மக்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com