கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அருகே கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கொட்டாரம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த லிங்கம் மகன் பிரகாஷ் (30). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பத்மாதேவி. 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவா்களுக்கு குழந்தை இல்லையாம். இதனால், பிரகாஷ் மதுப் பழக்கத்துக்கு உள்ளானதாகவும், இதுதொடா்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரகாஷ் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து பத்மாதேவி அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

