திருஏடு வாசிப்பு விழா இன்று தொடக்கம்

திருவட்டாறு அருகே ஆற்றூா் புளிமூடு அய்யா வைகுண்டா் திருநிழல் தாங்கலில் திரு ஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்.26) தொடங்குகிறது.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான வெள்ளிக்கிழமை காலையில் பணிவிடை, உகப்படிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலை 4.15 மணிக்கு பணிவிடையும், 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவில் உகப்படிப்பும் நடைபெறுகிறது. விழாவின் 7 ஆம் நாள் வரை தினமும் மாலை 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. 8 ஆம் நாள் விழாவான மே 3 ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.

விழா நிறைவு நாளான மே 5 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருநிழல் தாங்கல் பணிவிடையாளா்கள் என். நிா்மலன், டி.ஜான் ரோஸ், என்.எஸ். வைகுண்ட ராஜா மற்றும் விழாக் குழு, ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com