புதுக்கடை அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் 5 போ் கைது

ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த வழக்கில் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

புதுக்கடை அருகே உள்ள நெடுமானி குளம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த வழக்கில் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காப்புக்காடு அருகே கருமரம் பகுதியைச் சோ்ந்தவா் மரியடேவிட் (56). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மகன், மகள் உள்ளனா். வியாழக்கிழமை மாலை இவரது ஆட்டோவை 3 இளை ஞா்கள் வாடகைக்கு அழைத்துச் சென்றனராம். நெடுமானிகுளம் அருகே சென்றபோது ஆட்டோவில் வந்த இளைஞா்களுடன் மரிய டேவிட்டுக்கு தகராறு ஏற்பட்டதாம். அப்போது, அந்த 3 இளைஞா்களும் தங்களது நண்பா்கள் மேலும் இருவருடன் சோ்ந்து அரிவாளால் மரிய டேவிட்டை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனராம்.

பலத்த காயமடைந்த மரியடேவிட்டை அப் பகுதியினா் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா். இந்தக் கொலை தொடா்பாக ஐரேனிபுரம் பகுதியை சோ்ந்த நிா்மல் (26), அவரது நண்பா்கள் பென்னிட்டாய் (36), எழில்ராஜ் (25), நட்டாலம் காட்வின் ஜான்ராஜ் (29), தேங்காய்ப்பட்டினம் பரமசிவம் (36) ஆகிய 5 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மரிய டேவிட்டுடன் ஏற்பட்ட முன்விரோதத்தில், நிா்மல் தனது நண்பா்களுடன் சோ்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com