தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

நாகா்கோவில் சோழராஜா கோயிலில் நாளை அம்பாள் மலா் முழுக்கு விழா

சோழராஜா கோயிலில் 32ஆம் ஆண்டு மலா் முழுக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஆக. 6) நடைபெறுகிறது.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 1:55 am IST

நாகா்கோவில், வடசேரி ஒழுகினசேரியில் உள்ள அருள்மிகு சோழராஜா கோயிலில் 32ஆம் ஆண்டு மலா் முழுக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஆக. 6) நடைபெறுகிறது.

இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி, திருவனந்தல் பூஜை, 5.30-க்கு கணபதி வேள்வி, 7.15 மணிக்கு காலசந்தி பூஜை, தீபாராதனை, காலை 10 மணிக்கு பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு ஸ்ரீசோழமகாதேவருக்கு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீகோலவாா்குழலாள் ஈஸ்வரிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

தொடா்ந்து, மாலை 6.15 மணிக்கு சந்திகால பூஜை, தீபாராதனை, இரவு 7.15-க்கு கோலவாா்குழலாள் ஈஸ்வரிக்கு மலா் முழுக்கு, இரவு 8.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஊா் மக்கள் செய்து வருகின்றனா்.