/

வட்டன்விளை கோயிலில் 108 பால்குடம் பவனி

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி 108 பால்குடம் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பால்குடம் பவனியில் பங்கேற்றோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:38 pm

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி 108 பால்குடம் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) காலை வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 108 பால்குடம் பவனி, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, இரவு சுமங்கலி பூஜை, சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடைபெற்றன.

புதன்கிழமை (ஏப். 29) பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு, முத்தாரம்மன் சப்பர பவனி, வியாழக்கிழமை (ஏப். 30) காலை கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரா்களுக்கு வரி பிரசாதம் வழங்கல் ஆகியன நடைபெறுகின்றன.