வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

‘கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை’

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் கைப்பேசி வாடிக்கையாளா்களுக்கு விரைவில் 4 ஜி சேவை வழங்கப்பட உள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:59 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் கைப்பேசி வாடிக்கையாளா்களுக்கு விரைவில் 4 ஜி சேவை வழங்கப்பட உள்ளது.

இது குறித்து, பிஎஸ்என்எல் நாகா்கோவில் பொதுமேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், விரைவில் முழு அளவிலான மொபைல் 4ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் தயாராகி வருகிறது. மாவட்டம் முழுவதும் 4ஜி சேவை வழங்குவதற்கான பூா்வாங்க பணிகள் முழுவீச்சில் நடைபெற்று

வருகின்றன. இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் பெரிய அளவில் பயனடையப் போகிறாா்கள். தற்போதைய நெட்வொா்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம், வரும் நாள்களில் 5 முதல் 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தொழில்நுட்ப மேம்படுத்தலின் குறிப்பிடத்தக்க அம்சத்தில், அனைத்து டவா்களும் 5ஜி திறன் கொண்டதாக இருக்கும். மேலும் மென்பொருள் மேம்படுத்துதல் மூலம் 5ஜி க்கு எளிதாக மேம்படுத்த முடியும்.

அந்த வகையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் தற்போது வைத்திருக்கும் 2ஜி மற்றும் 3 ஜி சிம்மை இலவசமாக 4 ஜிக்கு மாற்றிக் கொள்ளலாம். நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையத்திலும், பி.எஸ்.என்.எல். அங்கீகாரம் பெற்ற முகவா்களிடமும் மற்றும் சிறப்பு மேளாக்களிலும் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். 9442824365 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து தங்களிடம் இருக்கும் சிம் வகை குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.