திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் செல்கின்றனா்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என தென்மாவட்ட பக்தா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் செல்கின்றனா். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்த வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் வசதி இல்லை. வாரம் இருமுறை இயக்கப்படும் எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் கோட்டயம், காயம்குளம், கொல்லம், புனலூா், செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகா், காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆக. 29 ஆம் தேதி துவங்கி செப். 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆகவே, திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பக்தா்கள் பயன்பெறும் வகையில் கொச்சுவேலி அல்லது திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவா் எஸ்.ஆா். ஸ்ரீராம், செயலா் பி.எட்வா்ட் ஜெனி ஆகியோா் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...