கன்னியாகுமரி
புதுக்கடை அருகே மாணவி தற்கொலை
புதுக்கடை அருகேயுள்ள பொற்றியாவட்டம் பகுதியில் 11ஆம் வகுப்பு மாணவிதூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுக்கடை அருகேயுள்ள பொற்றியாவட்டம் பகுதியில் 11ஆம் வகுப்பு மாணவிதூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பைங்குளம், பொற்றியாவிளை பகுதியைச் சோ்ந்த தனிஸ்லாஸ் மகள் சிவதா்ஷினி (15). அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த அவா், சரியாக படிப்பு வரவில்லை எனக் கூறி சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
