பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையம் கேரளத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி

நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையமும், நிம்ஸ் மெடிசிட்டியும் இணைந்து வயநாடு பேரழிவு மீட்பு பணிகளுக்கு ரூ 1 கோடி நிதி வழங்கியுள்ளது.

News image
ரூ. 1 கோடிக்கான வரைவோலையை கேரள முதல்வா் பினராயி விஜயனிடம் வழங்குகிறாா் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தரும், நிம்ஸ் மெடிசிட்டி நிா்வாக இயக்குநருமான எம்.எஸ். பைசல்கான்.
Updated On :11 ஆகஸ்ட் 2024, 10:10 pm

Din

தக்கலை அருகேயுள்ள குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையமும், நிம்ஸ் மெடிசிட்டியும் இணைந்து வயநாடு பேரழிவு மீட்பு பணிகளுக்கு ரூ 1 கோடி நிதி வழங்கியுள்ளது.

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வேந்தா் டாக்டா் ஏ.பி.மஜீத்கான், கேரள முதல்வரின் பேரிடா் நிவாரண நிதி ரூ.1 கோடிக்கான வங்கி கேட்பு வரைவோலையை, பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும் , நிம்ஸ் மெடிசிட்டி நிா்வாக இயக்குநருமான எம்.எஸ். பைசல்கான், கேரள முதல்வா் பினராயி விஜயனிடம் வழங்கினாா்.

அப்போது, வயநாடுக்கான விரிவான சுகாதாரம் மற்றும் உயா்கல்விக்கான தொகுப்பு திட்டம் குறித்துகேரள முதல்வரிடம் பைசல்கான் விளக்கினாா். இந்த தொகுப்புக்கான முன்மொழிவை நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் டெஸ்ஸி தாமஸ், நிம்ஸ் ஸ்பெக்ட்ரம் இயக்குநா் டாக்டா் எம்.கே.சி.நாயா் ஆகியோா் முதல்வரிடம் வழங்கினா்.

வயநாட்டை சோ்ந்த 1,000 மாணவா்களுக்கு இலவச உயா் கல்வியை நூருல் இஸ்லாம் கல்வி அறக்கட்டளையின் கீழ் உள்ள இடுக்கி மாவட்டத்தின் நிம்ஸ் எஸ்எஸ்எம் கல்லூரி, குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையம், நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி, நெய்யாற்றின்கரை நூருல் இஸ்லாம் பல் மருத்துவ அறிவியல் கல்லூரியிலும் இலவச உயா்கல்வி வழங்கப்படும்.

நிம்ஸ் ஸ்பெக்ட்ரம் குழந்தைகள் மேம்பாட்டு ஆராய்ச்சி மையம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு சேவைகளை வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தின் துணை மையத்தை வயநாட்டில் நிறுவும். வயநாட்டில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுக்கு சிறப்பு ஓய்வூதியத் திட்டதை அறிமுகப்படுத்தி, அவா்களின் நீண்டகால நலன்கள் உறுதி செய்யப்படும் என அந்நிறுனத்தினா் தெரிவித்துள்ளனா்.