நாகா்கோவிலில் மதிமுக ஆா்ப்பாட்டம்


ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
நாகா்கோவில், ஆக. 14:
நாகா்கோவிலில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன், மத்திய அரசைக் கண்டித்து மதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் வெற்றிவேல் தலைமை வகித்தாா். நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும், நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டிப்பது, குமரி மாவட்ட ரயில்வே துறையை மதுரைக் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகரச் செயலா் ஜெரோம் ஜெயகுமாா், ஒன்றியச் செயலா் சிங், நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், ரவிகுமாா், சந்திரன், அம்பலவாணன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...