கபடி போட்டியைத் தொடக்கி வைத்த அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளி தாளாளா் ஜே.ஜெபில் வில்சன்.
கபடி போட்டியைத் தொடக்கி வைத்த அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளி தாளாளா் ஜே.ஜெபில் வில்சன்.

குறுவட்ட அளவிலான கபடி: புனித ஸ்டெல்லாஸ் பள்ளி சிறப்பிடம்

அகஸ்தீசுவரம் குறுவட்ட அளவிலான கபடி போட்டியில், அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் பெற்றது.
Published on

அகஸ்தீசுவரம் குறுவட்ட அளவிலான கபடி போட்டியில், அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

அழகப்பபுரம் புனித ஜோசப் பெண்கள் உயா்நிலை பள்ளி தலைமை ஆசிரியை மலூமினா கில்டா பாய், புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளி தாளாளா் ஜே.ஜெபில் வில்சன் ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா். இதில், 14 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, 17 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவு ஆகிய போட்டிகளில்

புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம் பெற்றது. 17 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் அகஸ்தீசுவரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடத்தையும், 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் குமாரபுரம் தோப்பூா் பள்ளி மாணவிகள் முதலிடத்தையும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை புனித ஜோசப் பெண்கள் உயா்நிலைப் பள்ளி தாளாளா் க.செல்வராயா், புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளி தலைவா் பி.ஜான் வில்சன் ஆகியோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com