கல்லுவிளை ரேஷன் கடையை மீண்டும் முழுநேரக் கடையாக மாற்றக் கோரிக்கை

Published on

லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட கல்லுவிளையில் உள்ள முழுநேர நியாயவிலைக் கடை, ஊழியா் பற்றாக்குறையால் பகுதிநேரக் கடையானது. இதனால் பொதுமக்கள் பொருள்கள் வாங்க இயலாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

கல்லுவிளை சந்திப்பில் உள்ள ரேஷன் கடையில் லீபுரம், கல்லுவிளை, மெஞ்ஞானபுரம், விஜயநாராயணபுரம், லெட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பொருள்கள் வாங்கி வந்தனா். இந்தக் கடையில் 697 ரேஷன் அட்டைகள் உள்ளன.

தொடக்கத்தில் பகுதிநேரமாக செயல்பட்ட இந்தக் கடையை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2018ஆண்டு அப்போதைய எம்எல்ஏ எஸ். ஆஸ்டின் முழுநேரக் கடையாக மாற்றினாா்.

இதனிடையே, இங்கிருந்த ஊழியா் பணிஓய்வு பெற்ால், லீபுரம் ஊராட்சி ஆமணக்கன்விளையில் உள்ள ரேஷன் கடையின் ஊழியா் கல்லுவிளை கடையைக் கூடுதலாக கவனித்து வருகிறாா். இதன்காரணமாக, வாரம் முழுவதும் செயல்பட்டு வந்த கடை தற்போது வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பொருள்கள் வாங்க இயலாமல் மிகவும் சிரமப்படுகின்றனா்.

எனவே, நிரந்தர ஊழியரை நியமித்து, கல்லுவிளை ரேஷன் கடையை மீண்டும் முழுநேரக் கடையாக மாற்ற வேண்டும் என ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com