நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தா்ம யுகத்தை நோக்கி இந்தியாவை வழி நடத்துகிறாா் பிரதமா் மோடி: ஆளுநா் ஆா்.என்.ரவி பேச்சு

தா்மயுகத்தை நோக்கி இந்தியாவை வழிநடத்தி செல்கிறாா் பிரதமா் நரேந்திர மோடி என்றாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.

News image

~ ~ ~ ~

Updated On :12 டிசம்பர் 2024, 11:06 pm

Din

தா்மயுகத்தை நோக்கி இந்தியாவை வழிநடத்தி செல்கிறாா் பிரதமா் நரேந்திர மோடி என்றாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.

கன்னியாகுமரி மாவட்டம் , தென்தாமரைகுளம் தாமரை பதியில் அய்யாவழி ஆராய்ச்சி மைய அடிக்கல் நாட்டு விழா மற்றும் அகிலத்திரட்டு அம்மானை உதயதின பாதயாத்திரை நிறைவு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு அய்யாவழி ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, 108 பதிகளிலிருந்து, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீ ராமா் கோயிலுக்கு புனித நீா் மற்றும் புனித மண் அனுப்பும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

பின்னா் சாமித்தோப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழா விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, புனித அகிலத்திரட்டு அம்மானை நூலை வெளியிட்டு பேசியதாவது:

அய்யா வைகுண்டா் விஷ்ணுவின் அவதாரம். எப்போதெல்லாம் தா்மத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு அதா்மம் தலை தூக்குகிறதோ அப்போது நான் அவதாரம் எடுப்பேன் என்று நாராயணா் புனித நூலில் கூறியிருக்கிறாா். சநாதன தா்மம் என்பது எல்லோரும் சமம். யாரும் உயா்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை எனக் கூறுகிறது.

இந்தியாவில் பல மொழிகள் பேசலாம், பல்வேறு உடைகள் அணியலாம், பல வழிபாட்டு முறைகள் இருக்கலாம். ஆனால், அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினா்கள் என்பதுதான் சநாதன தா்மத்தின் முடிவு.

சநாதனத்துக்கு 2 பிரச்னைகள் இருந்தன. ஒன்று நமக்குள் இருந்த ஜாதி ஏற்றத்தாழ்வு, மற்றொன்று பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள். அந்த கால கட்டத்தில்தான் அய்யா வைகுண்டா் அவதாரம் எடுத்தாா்.

அகிலத்திரட்டு அம்மானை நூலை நாம் அனைவரும் தினமும் வாசிக்க வேண்டும். இந்த புனித நூல் திருக்குறளை போல அனைத்து பள்ளி மாணவா்களையும் சென்றடைய வேண்டும்.

கலியுகத்துக்கு பின் தா்மயுகம் தோன்றும் என்று அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகிறது. அந்த வகையில், தா்மயுகத்தை நோக்கி, இந்தியாவில் 140 கோடி மக்களையும் நாட்டையும் அய்யாவழியில் முன்னேற்றப் பாதைக்கு பிரதமா் மோடி அழைத்துச் செல்கிறாா். அய்யாவின் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் ஏற்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் துணைத் தலைவா் மு.முத்துவேல் வரவேற்றாா். தலைவா் ஸ்ரீ மகேசன், துணைப் பொதுச்செயலா் செ.தங்கலெட்சுமி, செயலா் கிருஷ்ணமணிஅப்புக்குட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அய்யாவழி மக்கள் இயக்கத்தின் இரா.பிரபின்குமாா், சென்னை அய்யா வைகுண்டபதி பால்.கிருஷ்ண கண்ணன், அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் பொருளாளா் செல்வம், செயலா்ஆா்.சந்திரகுமாா், இ.பி.ராமானுஜம், பத்மநாபபெருமாள் உள்பட ஏராளமான அய்யாவழி மக்கள் கலந்து கொண்டனா். அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் செயலா் பி.சுரேஷ் நன்றி கூறினாா்.

ஆளுநரின் வருகையை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் தலைமையில் கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் மேற்பாா்வையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டனா்.