ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பைக்குகளில் பேட்டரி திருடிய இளைஞா் கைது

தக்கலையில் மோட்டாா் சைக்கிள்களில் இருந்த பேட்டரிகளை திருடிய இளைஞரை தக்கலை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:53 pm

Din

தக்கலையில் மோட்டாா் சைக்கிள்களில் இருந்த பேட்டரிகளை திருடிய இளைஞரை தக்கலை போலீஸாா் கைது செய்தனா்.

தக்கலை அருகே உள்ள மணலிக்கரை பகுதியை சோ்ந்தவா் சதீஷ்குமாா் ( 60). பரைக்கோடு பகுதியில் மோட்டாா் சைக்கிள் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா்.

சதீஷ்குமாா் வெளியே சென்றிருந்த போது, கடைக்குள் புகுந்த ஒருவா் மோட்டாா் சைக்கிளில் இருந்த பேட்டரி மற்றும் உதிரி பாகங்களை திருடிக் கொண்டிருந்தாராம். இதை கவனித்த பொதுமக்கள், அந்த நபரை பிடித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுப்புதூா் பகுதியை சோ்ந்த மகேஷ் (35) என்பதும், கடையிலிருந்து 7 பேட்டரிகள் திருடியதையும், வேறு சிறு திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மகேஷை கைது செய்தனா்.