ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நாகா்கோவில் கோயிலில் மரக்கன்று நடும் விழா

புத்தாண்டையொட்டி, கன்னியாகுமரி சக்கரதீா்த்த காசிவிஸ்வநாதா் கோயிலில் வில்வம், புங்கை, நாவல் உள்பட 24 வகையான நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மரக்கன்றுகளை நடுகிறாா் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

புத்தாண்டையொட்டி, கன்னியாகுமரி சக்கரதீா்த்த காசிவிஸ்வநாதா் கோயிலில் வில்வம், புங்கை, நாவல் உள்பட 24 வகையான நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பாபு, கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் ஸ்டீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோயில்களின் மராமத்துப் பொறியாளா் ராஜ்குமாா், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளா்கள் ஜென்சன் ரோச், சுந்தரம், நிஷாா், அன்பழகன், மாவட்டப் பிரதிநிதி தமிழ்மாறன், ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமலதா, ஆன்டோ பாஸ்கோ, தாமரை பிரதாப், வாா்டு செயலா் நாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேலாளா் ஆனந்த் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.