ஆரல்வாய்மொழியில் பிளேடால் கழுத்தை அறுத்து முன்னாள் கவுன்சிலா் தற்கொலை

காதல் மனவேதனையில் முன்னாள் கவுன்சிலா் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில், தனது மகள் காதலனுடன் சென்ால் மனம் உடைந்த பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஆரல்வாய்மொழி வடக்கூா் கீழத் தெருவைச் சோ்ந்தவா் சுந்தா் (50). ஆரல்வாய்மொழி பேரூராட்சி முன்னாள் வாா்டு உறுப்பினா். தற்போது வெளிநாட்டில் பணியாற்றினாா். அவரது மனைவி ரூபா. அவா்களது மகள் ஆஷிகா, கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஆஷிகாவுக்கு, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞடன் காதல் ஏற்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, அந்த இளைஞருடன் ஆஷிகா சென்றுவிட்டாா். இதுகுறித்து வெளிநாட்டில் இருந்த சுந்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவா் ஆரல்வாய்மொழிக்கு திரும்பி வந்தாா். அதன் பிறகு கடந்த சில நாள்களாக யாருடனும் பேசாமல் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை கழிவறைக்குச் சென்ற அவா், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரூபா, கதவை உடைத்து உள்ளே சென்றுபாா்த்தபோது, கழுத்திலிருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் சுந்தா் மயங்கிக் கிடந்தாா். தனது கழுத்தை அவா் பிளேடால் அறுத்துக் கொண்டது தெரியவந்தது. அவரை மீட்டு, நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com