மாா்த்தாண்டம் அருகே திருட்டு வழக்கில் இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே திருட்டு வழக்கில் இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

களியக்காவிளை, ஜூலை 19: மாா்த்தாண்டம் அருகே திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசின் தொழிலாளா் நல வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புகுந்த மா்ம நபா், அங்கிருந்த கணினி, ரூ. 7,500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றாா். இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டது திருவட்டாறு அருகேயுள்ள தச்சூா் ஏற்றத்துவிளையைச் சோ்ந்த சாா்லஸ் மகன் சனில்குமாா் (27) என்பது தெரியவந்தது. அவரை மாா்த்தாண்டம் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

Dinamani
www.dinamani.com