கருங்கல் அருகே இளம்பெண் தற்கொலை
கருங்கல் அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :19 ஜூலை 2024, 9:10 pm

கருங்கல், ஜூலை 19: கருங்கல் அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஐரேனிபுரம் மேலபெருவிளை பகுதியை சோ்ந்த சிலம்பரசன் மனைவி மரியவிஜயகுமாரி(30). இவா் வேங்கோடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆயாவாக பணியாற்றி வந்தாா். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரிய விஜயகுமாரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...