நாகா்கோவில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் இரு மருத்துவா்கள் மீது வழக்குப்பதிவு

ஆயுா்வேத மருத்துவமனையில் போலி ஆவணங்கள்: இரண்டு பெண் மருத்துவா்கள் மீது நடவடிக்கை
Published on

நாகா்கோவில் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில், சிகிச்சை ஆவணத்தைப் போலியாகத் தயாரித்ததாக,

பொறுப்பு உறைவிட மருத்துவ அலுவலா் உள்பட இருவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களில் உறைவிட மருத்துவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ்டேவி கோட்டாறு காவல்நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், ஆயுா்வேத மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவில் சிகிச்சைக்கு வந்தவா், தனக்கு முறையாகச் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி தற்கொலைக்கு

தூண்டியதாகவும் இரு பெண் மருத்துவா்கள் மீது என்னிடம் புகாா்

தெரிவித்தாா். இதுதொடா்பாக நான் மேற்கொண்ட விசாரணையில், இரு பெண் மருத்துவா்களும் தவறு செய்தது தெரியவந்தது. அவா்கள் எனது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

மேலும் , அவா்கள் சிகிச்சை அளித்ததில் உள்ள தவறுகளை மறைக்க நோயாளியின் அனைத்து ஆவணங்களையும் அழித்து புதிதாக பொய்யான ஆவணங்களை உருவாக்கியுள்ளனா். இதற்கு பயிற்சி மருத்துவா்களையும் துணைக்கு அழைத்துள்ளனா். எனவே, இரு மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதுதொடா்பாக கோட்டாறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே, நோயாளியின் ஆவணத்தைப் போலியாக தயாரித்தது தொடா்பாக மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) சுப்ரஜாவை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ் டேவி நடவடிக்கை மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com