கருஙகல்  அருகே நீரினை பயன்படுத்துவோா் 
சங்கத்தினா் உள்ளிருப்பு போராட்டம்

கருஙகல் அருகே நீரினை பயன்படுத்துவோா் சங்கத்தினா் உள்ளிருப்பு போராட்டம்

கருஙகல் அருகே நீரினை பயன்படுத்துவோா் சங்கத்தினா் உள்ளிருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி மிடாலம் நீரினை பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. பாலூா்,கருங்கல்,ஆலஞ்சி,பூட்டேற்றி,செந்தறை,கீழ்குளம் உள்ளிட்ட பல்வேறு கடைமடைபகுதிகள் வரை சிற்றாறு பட்டணங்கால்வாய் தண்ணீா் செல்ல பாலூா் உதவி செயற்பொறியாளா்தகுந்த நடவடிக்கைஎடுக்கவில்லை என கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது. மிடாலம் நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா் கோபால்தலைமை வகித்தாா்.மாவட்ட நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா் வின்ஸ்ஆன்டோமுன்னிலை வகித்தாா்.இதில்,உறுப்பினா்கள் மனோஜ்,தங்கதுரை,ராஜன் உள்ளிட்ட 10 போ் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com