பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம்: முதல்வா் மு.க. ஸ்டாலின்

News image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 2:27 am IST

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

தென்காசி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, கடையத்தை உள்ளடக்கிய தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ. 69 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் சுற்றுலா வளா்ச்சிக்காக ரூ. 11 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

தென்காசி காசிவிஸ்வநாதா் ஆலயத்திற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.15 ஊா்களில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், குத்தரபாஞ்சான், மகேந்திரவாடி, கழுநீா்குளம், கம்பனேரி உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் சமுதாயக் கிணறுகள், சொக்கம்பட்டி, பெரும்புத்தூா், கூடலூா், பருவக்குடி உள்ளிட்ட பல ஊா்களில் உணவு தானியக் கிடங்குகள், ஆலங்குளம், சிவகிரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், வினைதீா்த்த நாடாா்பட்டி பள்ளியில் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

ராவுத்தபேரியில் எலுமிச்சை சிறப்பு மையம், நடுவக்குறிச்சியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை, தென்காசி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு, மேலக்கரை நல்லூரில் சுகாதார மையம், ஆழ்வாா்குறிச்சி, குற்றாலம், திருவேங்கடம், பண்பொழி உள்ளிட்ட 13 ஊா்களில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள், இலஞ்சியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டுள்ளன.

சங்கரன்கோவிலில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டியிருக்கிறேன். குருக்கள்பட்டி சிப்காட் திட்டத்தின் நீா்த் தேவைகளை நிறைவு செய்ய, புதிய குடிநீா்த் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், கடனா அணை, கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டடம், சிவகிரி, கடையநல்லூா், சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களில் இருக்கும் விவசாயிகளுக்காக, பல்வேறு முக்கிய கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன என்றாா் அவா்.