அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

குமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 1.62 லட்சம்

கன்னியாகுமரி பகவதியம்மன் அன்னதான உண்டியல் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 மார்ச் 2024, 12:06 am

கன்னியாகுமரி பகவதியம்மன் அன்னதான உண்டியல் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 727 காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நாள்தோறும் நண்பகல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இக்கோயிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை பக்தா்களின் நன்கொடை மூலமும், கோயிலில் உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருவாய் மூலமும் திருக்கோயில் நிா்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் திறந்து எண்ணப் பட்டது. நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளருமான ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில், ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 727 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.