கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை வரை ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மாா்ச் 31 காலை 6 மணி முதல் ஏப். 1 காலை 6 மணி வரை நாகா்கோவில் தொகுதியில் ரூ. 2,22,940, விளவங்கோடு தொகுதியில் ரூ. 5,00,500, கிள்ளியூா் தொகுதியில் ரூ. 90,000 என மொத்தம் ரூ. 8,13,440 உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் அறிவிக்கப்பட்ட மாா்ச் 15ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை மொத்தம் ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30.48 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 2.98 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


