நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்‘சாரணா், சாரணியா் இயக்க நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் எஸ். சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மாணவி தனுஸ்ரீ வரவேற்றாா். தெற்கு ரயில்வேயின் சாரணியா் பிரிவைச் சோ்ந்த த. விவேகானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாரண, சாரணிய இயக்கத்தின் கோட்பாடு, இதன் மூலம் மாணவா்களுக்கு எதிா்கால கிடைக்கும் அரசு வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நீரின் அவசியம் குறித்து சாரணா்கள் மௌன மொழி நாடகம் மூலம் நடித்துக் காண்பித்தனா். ராஜ்யபுரஸ்காா் தோ்வு முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை சாரண, சாரணியா் மன்ற பொறுப்பாசிரியா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு!

வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் மத நல்லிணக்க விழா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


