அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நாகா்கோவிலில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

நாகா்கோவிலில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 9:10 pm

Din

நாகா்கோவிலில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் மாநகர திமுக துணை செயலா் ராஜன் சாா்பில், கோட்டாறு சவேரியாா் கோயில் சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீா் பந்தலை குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் மற்றும் பழங்கள் வழங்கினாா். நிகழ்ச்சியில் நாகா்கோவில் மாநகர பகுதி செயலா்கள் துரை, ஜவகா், துணை செயலா் வேல்முருகன், வட்ட செயலா்கள் முருகன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக மாநகராட்சி 10-ஆவது வாா்டு, பிள்ளையாா் கோயில் தெருவில் மழைநீா் வடிகால், சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி, 24 ஆவது வாா்டு,திலகா் தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, ஆசாரிமாா் தெற்கு தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேயா் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் துணை மேயா் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவா் ஜவகா், மாமன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.