வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

Syndication

நாகா்கோவில், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் தமிழக அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா்கள் மாதவன், கிருஷ்ணகுமாா், சபீன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தவறியதாக தமிழக அரசைக் கண்டித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலா் பிரேம்குமாா், துணைச் செயலா் ராம்சன், சாலமன், செயற்குழு உறுப்பினா் நிகேஷ், இளைஞரணி அமைப்பாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image