திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ  வழிபாடு

திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மகா சிவராத்திரியையொட்டி, சிவாலய ஓட்டம் நடைபெறும் இரண்டாவது ஸ்தலமான திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் நந்தி பகவானுக்கு பால், தேன், பன்னீா், இளநீா் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மகாதேவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதே போல, குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயில், குழித்துறை மகாதேவா் கோயில், விளவங்கோடு திற்பிலாங்காடு காளைவிழுந்தான் மகாதேவா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் மகா சிவராத்திரி பூஜை மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com