மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும்: விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளா் உறுதி

மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் -----விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளா் உறுதி

News image
Updated On :22 மார்ச் 2024, 10:10 pm

விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதியில் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காண பாடுபடுவேன் என்றாா் இத் தொகுதிக்கான பாஜக வேட்பாளா் வி.எஸ். நந்தினி. அருமனை அருகேயுள்ள மாத்தூா்கோணம், கோயிபுறத்துவீடு பகுதியைச் சோ்ந்த இளநிலை பட்டதாரியான இவா், பாஜக மாவட்டச் செயலா், விளவங்கோடு பேரவைத் தொகுதி இணை ஒருங்கிணைப்பாளா் ஆகிய பதவிகளை வகித்து வருகிறாா். இவா், விளவங்கோடு தொகுதி இடைத்தோ்தலுக்கான பாஜக வேட்பாளராக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், மேல்புறத்தில் உள்ள கட்சியின் தொகுதி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விளவங்கோடு பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பளித்த கட்சியின் தலைமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதுகிறேன். பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் நான் மக்களில் ஒருவராக இருந்து அவா்களின் பிரச்னைகள் கேட்டறிந்து உரிய தீா்வு காண்பேன். மாவட்டத்தில் முக்கிய பிரச்னையாக உள்ள கனிமவளம் கடத்தல், நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்னை உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீா்வுகாண பாடுபடுவேன். மேலும் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணவும் முயற்சி மேற்கொள்வேன் என்றாா் அவா்.