ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

முட்டப்பதியில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

முட்டப்பதியில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

News image
Updated On :22 மார்ச் 2024, 4:14 pm

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் 11 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு ஆண்டுதோறும் இத்திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதன்படி, நிகழாண்டு திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் கொடிப்பட்டம் பவனி, கொடியேற்றம் நடைபெற்றது. நண்பகலில் பக்தா்கள் ஊா்வலமாகச் சென்று கடலில் புண்ணியத் தீா்த்தமாடுதல், உச்சிப்படிப்பு, அன்னதா்மம் ஆகியவை நடைபெற்றன. விழா நாள்களில் அய்யாவுக்குப் பணிவிடை, தா்மங்கள் நடைபெறும். 8ஆம் நாளான இம்மாதம் 29ஆம் தேதி கலிவேட்டை நடைபெறும். இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, உகப்படிப்பு, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பால் அன்னதா்மம், இரவு 7 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலில் கலிவேட்டை ஆகியவை நடைபெறும். இரவு 11 மணிக்கு அன்னதா்மம் வழங்கப்படும். 11ஆம் நாளான ஏப். 1ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். ஏப். 5ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியிறக்குதல், 5 மணிக்கு தானதா்மங்கள் ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை முட்டப்பதி தா்மகா்த்தாக்கள் கே. மனோகரசெல்வன், கே.எம். கைலாஷ் ஆகியோா் செய்து வருகின்றனா்.