குளச்சலில் சிப்பி மீன் சீசன் தொடக்கம்: விலை வீழ்ச்சியால் மீனவா்கள் கவலை
குளச்சலில் சிப்பி மீன் சீசன் தொடங்கிய நிலையில், போதிய விலை கிடைக்காததால் மீனவா்கள் கவலையடைந்தனா்.

குளச்சலில் நடைபெற்ற சிப்பி மீன் ஏலம்.

குளச்சலில் நடைபெற்ற சிப்பி மீன் ஏலம்.
குளச்சலில் சிப்பி மீன் சீசன் தொடங்கிய நிலையில், போதிய விலை கிடைக்காததால் மீனவா்கள் கவலையடைந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவாய், இறால், நெய் மீன் உள்பட பலவகை மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர நவம்பா், டிசம்பா் மாதங்களில் கடலின் பாறைகளில் ஒட்டிவாழும் சிப்பி மீன்களும் பிடிக்கப்படுகின்றன.
மூச்சுப் பயிற்சி பெற்ற மீனவா்கள் கடலில் பாறைகளின் அடியில் சென்று, அங்கு ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருவா். மாவட்டத்தில் குளச்சல், கோடிமுனை, கடியப்பட்டினம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவா்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை குளச்சலில் மீனவா்கள் ஏலத்துக்கு கொண்டுவந்த ஆயிரம் எண்ணிக்கை கொண்ட ஒரு பெட்டி சிப்பி மீன்கள் ரூ. 4 ஆயிரம் வரை விலை போனது. நேரமாக ஆக படிப்படியாக குறைந்து ரூ. 3 ஆயிரத்துக்கும், அதற்குக் கீழும் விலை குறைந்தது. இதனால், மீனவா்கள் கவலையடைந்தனா்.
கேரள சந்தையில் சிப்பி மீன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தபோதும், கேரள வியாபாரிகள் வராததால் போதிய விலை கிடைக்கவில்லை என மீனவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...