நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News image

திருவள்ளுவா் சிலை வளாகத்தில் போடப்பட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.

Updated On :27 நவம்பர் 2024, 9:20 pm

Din

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை, கடந்த 2000-ஆவது ஆண்டு ஜன.1-ஆம் தேதி அப்போதைய முதல்வா் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தமிழக அரசு சாா்பில் வருகிற ஜன.1-ஆம் தேதி கன்னியாகுமரியில் வெள்ளி விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை திறந்து வைக்கிறாா்.

இதையொட்டி பாதுகாப்பு கருதி திருவள்ளுவா் சிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.