கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

News image

திற்பரப்பு அருவியில் புதன்கிழமை சாரல் மழையின்போது உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:06 pm

Din

குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இம்மாதம் 3 ஆவது வாரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என வானிலை அறிவிப்புகள் தெரிவித்துள்ள போதிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் இடைவிடாது சாரல் மற்றும் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

இதே போன்று கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணிமுதல் புதன்கிழமை காலை 6 மணிவரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக முள்ளங்கனாவிளையில் 17.2 மி.மீ. பதிவாகியிருந்தது.

புதன்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.43 அடியாகவும், பெருஞ்சாணி அணை-62.55,, சிற்றாறு- 1 அணை- 13.02, சிற்றாறு 2 அணை- 13.12, பொய்கை அணை--14.8, மாம்பழத்துறையாறு அணை- 49.29, முக்கடல் அணை-18.9 அடியாகவும் இருந்தது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களி்ல் புதன்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

குறிப்பாக, திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

திற்பரப்பு அருவிப் பகுதியில் தொடா் சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.