புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது
புதுக்கடை அருகே தோட்டாவரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :15 அக்டோபர் 2024, 9:59 pm

புதுக்கடை அருகே தோட்டாவரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
தோட்டாவரம் பகுதியைச் சோ்ந்த ரசல்ராஜ் மகன் ஜெகன்ராஜ் (42) என்பவா், அப்பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ளாா். அவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், புதுக்கடை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 701 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, ஜெகன்ராஜை கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...