புதுக்கடை அருகே முதியவரை தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் முதியவரை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :15 அக்டோபர் 2024, 10:03 pm

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் முதியவரை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பைங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன்(65). இவருக்கும் வெள்ளையம்பலம் பகுதியைச் சோ்ந்த செல்லையன் மகன் செல்வராஜ்(52) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை வெள்ளையம்பலம் பகுதியில் நின்ற குமரேசனை, செல்வராஜ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த முதியவா் குமரேசனை அப்பகுதியினா் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...