புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வலம்புரிவிளை உரக்கிடங்கில் ரூ. 36 லட்சத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி வலம்புரிவிளை உரக்கிடங்கில் ரூ. 36.45 லட்சத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

வலம்புரிவிளை உரக்கிடங்கில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்த மேயா் ரெ. மகேஷ். உடன், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோா்

Updated On :15 அக்டோபர் 2024, 10:13 pm

Din

நாகா்கோவில் மாநகராட்சி வலம்புரிவிளை உரக்கிடங்கில் ரூ. 36.45 லட்சத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மாநகராட்சிக்குள்பட்ட ஆவின் பால் பண்ணை வளாகத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதாக வந்த புகாரின்பேரில், பால் பண்ணையில் மேயா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சுகாதார சீா்கேடு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா், கன்காா்டியா தேவாலயம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியைப் பாா்வையிட்ட அவா், அங்குள்ள மழைநீா் வடிகால்களைத் தூா்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

 நாகா்கோவில் பால்பண்ணை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயா் ரெ. மகேஷ். உடன், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோா்.

நாகா்கோவில் பால்பண்ணை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயா் ரெ. மகேஷ். உடன், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோா்.

தொடா்ந்து, வலம்புரிவிளை உரக்கிடங்கில் தனியாா் நிறுவன பங்களிப்புடன் ரூ. 36.45 லட்சத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணியை மேயா் தொடக்கிவைத்தாா். இம்மையம் மூலம் தனியாா் செப்டிக் டேங்க் வாகனங்களின் கழிவுகளை சுத்திகரிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

நிகழ்ச்சியில், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, உதவி செயற்பொறியாளா் ரகுராம், உதவிப் பொறியாளா் ராஜசீலி, நகரமைப்பு ஆய்வாளா் மகேஸ்வரி, மண்டலத் தலைவா்கள் ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, தொழில்நுட்ப அலுவலா் பாஸ்கா், சுகாதார அலுவலா்கள் பகவதிபெருமாள், ராஜாராம், மாமன்ற உறுப்பினா்கள் அனிலா, ஸ்டாலின் பிரகாஷ், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ஆனந்த், பகுதிச் செயலா் ஷேக்மீரான், வட்டச் செயலா்கள் பிரபாகரன், ராமகிருஷ்ணன், மாவட்டப் பிரதிநிதி ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.